/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்று இடத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்
/
மாற்று இடத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்
மாற்று இடத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்
மாற்று இடத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்
ADDED : ஜன 10, 2024 06:44 AM
மதுரை : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள், புனரமைப்பு பணிகள் நடக்கவுள்ளதால் அருகில் உள்ள நலவாழ்வு மையங்களில் தற்காலிகமாக செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இன்று (ஜன.,10) முதல் மண்டலம் 2ல் வார்டு எண் 63 பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையம் 69வது வார்டு சம்மட்டிபுரம் பைபாஸ் ரோடு நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் செயல்படும். மண்டலம் 4 ல் வார்டு எண் 44 பாலரெங்காபுரம் நகர்ப்புற சுகாதார நிலையம் அதே வார்டுக்குட்பட்ட புதுராமநாதபுரம் ரோடு மையத்திலும், மண்டலம் 3ல் வார்டு எண் 67 விராட்டிபத்து சுகாதார நிலையம், அதே வார்டில் எச்.எம்.எஸ்., காலனி மையத்திலும் செயல்படும்.
மண்டலம் 2ல் வார்டு எண் 24 பீபிகுளம் சத்தியமூர்த்தி 6வது தெரு சுகாதார நிலையம் ஜன.,18 முதல் வார்டு 2ல் சிவகாமிபுரம் கட்டபொம்மன் நகர் மையத்தில் செயல்படும் என கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

