/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் கொலை
/
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் கொலை
ADDED : ஜன 25, 2025 01:49 AM
துாத்துக்குடி:மதுரை கோ.புதுார் லுார்துநகரை சேர்ந்த துளசிராஜன் மகன் சிந்துராஜ், 28, என்பவர் குடிபோதைக்கு அடிமையாக இருந்தார். அதில் இருந்து மீள்வதற்காக கடந்த, 2020ல் மதுரை துளசி பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார். திடீரென அவர் மாயமானார்.
இதுதொடர்பாக சிந்துராஜின் மனைவி பானுப்பிரியா, மதுரை மாட்டுதாவணி காவல் நிலையத்தில் 2023ல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, சிகிச்சையில் இருந்த சிந்துராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. கொலையான சிந்துராஜின் மனைவி பானுப்பிரியாவுக்கும், துளசி பவுண்டேஷன் உரிமையாளர் ரவீந்திரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அதை சிந்துராஜ் கண்டித்ததால் அவரை கொலை செய்து, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா மானாடு பகுதியில் உள்ள தேரிக்காட்டில் உடலை புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து, போதை மறுவாழ்வு மைய உரிமையாளரான வண்டியூர் சதாசிவம் நகரை சேர்ந்த ரவீந்திரன், 47, அவரது நண்பரான துாத்துக்குடி மாவட்டம், அமலிநகரை சேர்ந்த கண்ணன், 53, ஆகியோரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
புதைக்கப்பட்ட சிந்துராஜின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

