தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றம் திரும்பினார் முருகப்பெருமான்

 குன்றம் திரும்பினார் முருகப்பெருமான்

 குன்றம் திரும்பினார் முருகப்பெருமான்


ADDED : ஆக 29, 2026 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 01:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் நேற்று பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.

மதுரையில் நடந்த ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்பதற்காக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து ஆக. 23ல் புறப்படாகினர். திருவிழா முடிந்து மதுரை சுவாமிகளிடம் திருப்பரங்குன்றம் சுவாமிகள் நேற்று முன்தினம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை நெல்பேட்டை பகுதி மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினர். அங்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சர்வ அலங்காரமாகி பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us