/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
/
யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சும் என்பது கட்டுக்கதை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : செப் 27, 2024 04:52 AM

மதுரை: திருமால்புரம் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக நாங்குநேரி அருகே தென்குளம், பருத்திபாடு கிராமங்களில் 1711 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துடன் (டி.என்.பி.எல்.,) இணைந்து யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்க அறநிலையத்துறை 2016 ல் அனுமதியளித்தது. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். கால்நடைகளின் மேய்ச்சலுக்கு நிலம் இல்லாமல் போய்விடும். யூகலிப்டஸ் நட அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
இதர பயிர்களைவிட யூகலிப்டஸ் குறைவான தண்ணீரையே உறிஞ்சுகிறது என டேராடூனிலுள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. யூகலிப்டஸ் அதிக நீரை உறிஞ்சும் என்ற நம்பிக்கை ஒரு கட்டுக்கதையாக தோன்றுகிறது.
யூகலிப்டஸ் வளர்ப்பதால் நீர் வளம் குறையும் என மனுதாரர் அச்சப்படுகிறார். அது நிரூபிக்கப்படவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் சமவெளிப் பகுதிகளில் யூகலிப்டஸ் வளர்க்கத் திட்டமிட்டால் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து நீர்வளத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் ஆய்வு செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.