/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி 'அம்ரித் பாரத்' ரயில் ஜன. 25 முதல் இயக்கம்

ADDED : ஜன 20, 2026 07:13 AM

மதுரை: நாகர்கோவில் - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையே 'அம்ரித் பாரத்' வாராந்திர ரயில் ஜன., 25 முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயிலுக்கான தொடக்க ஓட்டத்தை பிரதமர் மோடி ஜன., 17ல் கொடியசைத்து துவக்கி வைத்தார். நேற்று (ஜன. 19) இரவு 8:10 மணிக்கு இந்த ரயில் மதுரை வந்தது. இரவு 11:10 மணியளவில் நாகர்கோவில் சென்றது. ஜன., 25 முதல் ஞாயிறு தோறும் இரவு 11:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (20604), புதன் அதிகாலை 5:00 மணிக்கு நியூ ஜல்பைகுரி செல்லும். மறுமார்க்கத்தில் ஜன., 28 முதல் புதன் தோறும் மாலை 4:45 மணிக்கு புறப்படும் ரயில் (20603), வெள்ளி இரவு 11:00 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்கிறது. 8 சிலீப்பர் பெட்டிகள், 11 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் உடன் இயக்கப்படுகிறது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்கவுள்ளது.