ADDED : ஏப் 12, 2025 04:45 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மகாராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட போடிநாயக்கன்பட்டியில் 'நல்லான் ஊருணி' உள்ளது. இதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், தாசில்தார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: அதை ஒரு நீர்நிலை என்பதை அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாசில்தாரால் அளவீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
அளவீடு முடிவில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நோட்டீஸ் அளித்து அகற்ற செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.
