தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் நியமனம்

 போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் நியமனம்

 போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் நியமனம்


ADDED : மே 14, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் போதை பொருள் தடுப்புப் பிரிவுக்கு எஸ்.ஐ.,க்கள் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை நகர் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு உத்தரவின்பேரில் மதுரை தெற்கு பகுதிக்கு எஸ்.ஐ., அழகுபாண்டி தலைமையில் ஏட்டுகள் பால்பாண்டி, சுரேஷ்குமார், வேல்முருகன், ஏ.சுரேஷ்குமார், பழனிசாமி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதிக்குஎஸ்.ஐ., கோடீஸ்வர மருது தலைமையில் ஏட்டுகள் நாகசுந்தர், கிஷோர்குமார், செந்தில்வேல், ஜார்ஜ், தவமணி ஆகியோர் கொண்ட தனிப்படையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவினருக்கு நகர் கண்ட்ரோல் ரூம் உதவி கமிஷனர் நோடல் அதிகாரியாக இருப்பார். மைக் உடன் கூடிய வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகளுக்கு இப்பிரிவு தினசரி ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் சிங்கப் பெண் சிறப்பு தனிப்படை (எஸ்.எஸ்.எப்.,) பிரிவுக்கு எஸ்.ஐ., நித்யா தலைமையில் ஏட்டுகள் ஜெயா, சந்திரா, ரோஹினி, ஜோதி ஆகியோர் கொண்ட பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us