/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி இசை இலக்கிய விழா ஜன.6 முதல் 12 வரை நடக்கிறது
/
நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி இசை இலக்கிய விழா ஜன.6 முதல் 12 வரை நடக்கிறது
நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி இசை இலக்கிய விழா ஜன.6 முதல் 12 வரை நடக்கிறது
நடனகோபால நாயகி சுவாமிகள் ஜெயந்தி இசை இலக்கிய விழா ஜன.6 முதல் 12 வரை நடக்கிறது
ADDED : டிச 31, 2024 04:50 AM
மதுரை: மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நடனகோபால ஸ்வாமிகள் ஸங்கீத மஹாலில், நடனகோபால நாயகி சுவாமிகளின் 182வது ஜெயந்தி இசை இலக்கிய விழாஜன.6 முதல் 12 வரை நடக்கிறது.
கீதா நடனகோபால நாயகி மந்திர் தலைவர் குமரேசன் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம், நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை, வீணை கச்சேரி, பாகவதர்களின் சங்கமம், விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
ஜன. 6 மாலை 5:00 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்குகிறது. ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி., கிஷோர் குமார், மதுரைக் கல்லுாரி செயலாளர் நடனகோபால் பங்கேற்கின்றனர். 2ம் நாள் மாலை 6:30 மணிக்கு மந்திர் உபதலைவர் ஞானப்பிரபாகரன் தலைமையில் முத்தமிழ் நிகழ்ச்சி நடக்கிறது. பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பங்கேற்கிறார்.
3ம் நாள் மாலை 6:30 மணிக்கு மந்திர் பொருளாளர் ரகுராஜேந்திரன் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன் பங்கேற்கிறார்.
4ம் நாள் மாலை 6:30 மணிக்கு மந்திர் செயலாளர் கீதாபாரதி தலைமையில் சங்கீத கச்சேரி நடக்கிறது. கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரி கவுன்சில் செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். மாலை 6:00 மணிக்கு மந்திர் செயலாளர் மோகன்ராம் தலைமையில் வீணை கச்சேரி, பக்தி இன்னிசை நடக்கிறது.
மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லுாரி தலைவர் ஜவஹர்பாபு பங்கேற்கிறார்.
6ம் நாள் துவாதசியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சிகள், கோலாட்டம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மந்திர் இணைச்செயலாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான கவுன்சில் வாரியம் இணை இயக்குநர் சுவாமிநாதன் பங்கேற்கிறார்.
7ம் நாள் மாலை 6:00 மணிக்கு மந்திர் நிர்வாகக்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மருந்துகள் உரிமம், கட்டுப்பாட்டு மையம் இயக்குநர் ஸ்ரீதர் பங்கேற்கிறார்.