/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தேசியக்கொடி கண்காட்சி
/
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தேசியக்கொடி கண்காட்சி
ADDED : ஆக 09, 2025 04:12 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி' எனும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தேசியக் கொடியின் மகத்துவம்குறித்த2 நாள் கண்காட்சி நேற்று துவங்கியது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆக. 15ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பான இப்பிரசாரம், ஆக., 2 முதல் 15 வரை ரயில்வே துறையால் நடத்தப்படுகிறது. மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் கண்காட்சியை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார்.தேசியக்கொடி உருவான விதம், அதன் சிறப்பு, புனிதம், விடுதலைப் போரில் அதன் பங்கு, வீடுதோறும் மூவர்ணக் கொடி இயக்கம் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. 'செல்பி பாய்ன்ட்' வசதியும் உள்ளது.
இன்று (ஆக., 9) மாலை 5:00 மணியுடன் கண்காட்சி நிறைவுபெறுகிறது. அனுமதி இலவசம். கூடுதல் மேலாளர் ராவ், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

