நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்துள்ளதாவது: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை அஞ்சல் கோட்டம் சார்பில் 'இல்லம் தோறும் மூவர்ணக்கொடி 2025' திட்டத்தின்கீழ் அனைத்து தபால் நிலையங்களிலும் ரூ. 25க்கு தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேவையுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.