ADDED : பிப் 06, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : டில்லியில் நடந்த யூத் கேம்ஸ் நேஷனல் சாம்பியன்ஷிப் ஹேண்ட் பால் போட்டியில் 19 வயது ஆடவர் பிரிவில் தமிழக அணியினர் தங்கம் வென்றனர்.
வீரர்கள் பிரசன்னா, ஜெயசாலின், முபின் குமார், முகமதுஅஸ்லாம், டோனி, ஆசிக், ஆர்சீத், கிங் ஸ்டார், பிர்டோ, விஜின்ஜோஸ் உட்பட வீரர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் தமிழக அணி 15 --- 14 கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
உடற்கல்வி இயக்குநர் பால்சன் பிரிட்டோ, பயிற்சியாளர் ரெத்சின் பிரைட், தலைமை பயிற்சியாளர் குமார், யூத் கேம்ஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் அன்பரசன் பாராட்டினர்.