ADDED : டிச 11, 2025 05:20 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் பள்ளியில் தேசிய மனித உரிமைகள் தினம் தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது.
ஆசிரியர்கள் ஜீவன், அற்புதம் ஆகியோர் மனித உரிமைகள் பற்றி மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள அட்டைகளை பயன்படுத்தி விளக்கமளித்தனர். அனைவரும் மனித உரிமைகளைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
