ADDED : ஏப் 01, 2026 06:31 PM

மதுரை: கேலோ இந்தியா அஸ்மிதா தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் மதுரை மாணவி மோஷிக நாச்சியார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வாக்கோ இந்திய கிக் பாக்சிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் இணைந்து கேலோ இந்தியா அஸ்மிதா தேசிய கிக் பாக்ஸிங் போட்டியை செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் நடத்தியது.
பல்வேறு மாநிலங்களின் 800 க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட், லோ கிக், மியூசிக்கல், கிரியேட்டிவ் பார்ம் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
மதுரையின் மோஷிக நாச்சியார் கடந்த மாதம் பெங்களூரில் நடந்த தெற்கு மண்டல போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். கேலோ இந்தியா அஸ்மிதா தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் பாய்ன்ட் பைட்டிங் பிரிவு 46 எடைப் பிரிவிலும் பங்கேற்று வெள்ளி வென்றார். அவரை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க தலைவர் நாராயணன், பொதுச் செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக் பாராட்டினர்.
