/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய சிலம்ப போட்டி: மதுரை வீரர்கள் வெற்றி
/
தேசிய சிலம்ப போட்டி: மதுரை வீரர்கள் வெற்றி
ADDED : மே 20, 2025 01:06 AM

திருப்பரங்குன்றம்: கேரள மாநிலம் கொல்லத்தில் தேவராஜ் வாஸ்தவி சிலம்பாட்ட கழகம் சார்பில் தேசிய சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் மதுரை சாதனை சிறகுகள் சிலம்பாட்ட கழகத்தின் 13 வீரர்கள் பரிசு வென்றனர்.
ஆண்கள் : 6--7 வயது பிரிவில் சிவசங்கர் முதல் பரிசு, யுகேஷ் கேசவ் 2ம் பரிசு. 9 வயது பிரிவில் ஜோகித் கேசவ் முதல் பரிசு, 10 வயது பிரிவில் இமயன் முதல் பரிசு, 13 வயது பிரிவில் தபுரஷ்பாண்டியன் முதல் பரிசு, 14 வயது பிரிவில் கோகுல் 2ம் பரிசு, 15 வயது பிரிவில் பிரசன்னா முதல் பரிசு, சிவகிருஷ்ணன் 2ம் பரிசு வென்றனர்.
பெண்கள்: 11 வயது பிரிவில் விஷ்ணு பிரியா, தன்சிகா, 12 வயது பிரிவில் சர்மிளா, 13 வயது பிரிவில் சுகந்தி, 14 வயது பிரிவில் கீர்த்திகா முதல் பரிசு வென்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர் தங்கபாண்டி பாராட்டினார்.