/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
/
தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : ஜன 29, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் தமிழகம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பூம்சே மற்றும் க்யூருகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டு 8 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர் ரவி, பயிற்சியாளர்கள் நாராயணன், கார்த்திக், பிரகாஷ் குமார், ரகுராமன், சஞ்சீவ் பாராட்டினர்.