ADDED : பிப் 02, 2026 05:17 AM
மதுரை: அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் ராமச்சந்திரன் நினைவு தேசிய அளவிலான 14 வயது, 16 வயது ஆடவர், மகளிர் டென்னிஸ் போட்டிகள் மதுரை யூனியன் கிளப், மதுரைக்கல்லுாரியில் நடந்தன.
இறுதிப்போட்டி முடிவுகள் : 14 வயது மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிகளில் இலக்கியா வடிவேல் 7 - 5, 6 - 4 செட்களிலும், 16 வயது பிரிவில் 7 - 6 (5), 6 - 4 செட்களில் ஹரித்தீஸ்வரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 16 வயது இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆதிரை, அனன்யா ஜோடி 6 - 1, 6 - 2 செட்களில் அதிதி பி, சகானா ஜோடியை வீழ்த்தினர்.
14 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆதித்யா கவுரவ் காமத் 7 - 5, 0 - 6, 6 - 1 செட்களில் ஹரிஹரன் மகாமுனியை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 16 வயது ஒற்றையர் பிரிவில் பிரணவ் கார்த்திக் 6 - 3, 6 - 0 செட்களில் அபேல் ஜார்ஜை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 16 வயது இரட்டையர் பிரிவில் பிரணவ் கார்த்திக், யஷ்வந்த் ஜோடி 6 - 3, 6 - 3 செட்களில் ரிச்வின், கெஸ்வின் ஜோடியை வீழ்த்தினர். முதன்மை நடுவராக கிருஷ்ணன் பங்கேற்றார்.

