ADDED : பிப் 12, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர், : கேரளா திருவனந்தபுரத்தில் அகில இந்திய சம்மேளனத்தின் 49வது தேசிய யோகாசன சாம்பியன் போட்டிகள் பிப். 13 முதல் பிப். 16 வரை நடக்கிறது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு யோகாசன சங்கம் சார்பில் 20 ஆண்கள், 20 பெண்கள் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மதுரையில் இருந்து பயிற்சியாளர்கள் ராஜகோபால், நித்தியா, ராஜ்பால், விஜயராம் மோகன் தலைமையில் கேரளா புறப்பட்டனர் என தமிழக யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

