நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுார், : மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி தேசிய இளைஞர் தினம் சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விவேகானந்தர் சிலைக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. சுவாமி அர்க்கபிரபானந்தர் விவேகானந்தர் வாழ்க்கை சொல்லும் செய்தி குறித்து பேசினார். பேராசிரியர் இளங்கோ ராமானுஜம் இன்றைய தலைமுறையின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு சுவாமி விவேகானந்தரே என்றார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.