/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாடு முழுவதும் மதுவிலக்கு: திருமாவளவன் பேச்சு
/
நாடு முழுவதும் மதுவிலக்கு: திருமாவளவன் பேச்சு
ADDED : செப் 23, 2024 07:59 AM
மதுரை : 'நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என மதுரை வக்பு வாரியக் கல்லுாரியில் நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
தமிழ்நாடு ஜமாஅத் உல் உலமா சபை சார்பில் நடந்த விழாவில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
மதுரையில் இருந்தே என் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பார்லியில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு மத்திய அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ளன.
'கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு பேசுகிறாரே' என கூறுகின்றனரே தவிர பாராட்ட ஆளில்லை. நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஜாதி, மதம் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க தேசியம் சார்ந்த பார்வை தேவை என்றார்.