நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அக். 3ல் தொடங்கிய நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவுற்றது. விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடந்தது. மலைமேல் உள்ள ராக்காயி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 3:30 முதல் இரவு 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று (அக். 13) சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோட்டைவாசல் முன்பு மாலை 4.15 மணியளவில் சுவாமி அம்பு போடும் உற்ஸவம் நடந்தது.