ADDED : அக் 01, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 12 வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெறும். அக். 13 விஜயதசமி அன்று, சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி கோட்டைவாசல் முன்புள்ள மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மாலை 4:05 மணிக்கு மேல் 4:25 மணிக்குள் அம்பு போடும் உற்ஸவம் நடைபெறும்.
கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மதியம் 3:30 முதல் இரவு 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, பாலமுருகன், பி.ஆர்.ஓ., முருகன் செய்து வருகின்றனர்.