/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வேப்பம்பழம்
/
விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வேப்பம்பழம்
ADDED : ஜூலை 22, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் வேப்பம்பழம் சீசன் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை சேகரித்து வருகின்றனர்.
விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேலை இழந்து இருந்தனர். தற்போது வேப்பம்பழம் சீசன் துவங்கி விட்டதால் அப்பழத்தை சேகரித்து விற்று வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வேப்பங்கொட்டை சேகரிப்பு அன்றாட வருவாய் தரும் தொழிலாக உள்ளது. கமிஷன் கடைகளில் கிலோ ரூ. 65க்கு கொள்முதல் செய்கின்றனர். இரு மாதங்கள் வரை சீசன் இருக்கும். அதன்பின் விவசாய வேலைகளை துவங்க வேண்டும் என்றனர்.