/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வந்த அயலக தமிழர்கள் தமிழக சொந்தங்களால் வியப்பு
/
மதுரை வந்த அயலக தமிழர்கள் தமிழக சொந்தங்களால் வியப்பு
மதுரை வந்த அயலக தமிழர்கள் தமிழக சொந்தங்களால் வியப்பு
மதுரை வந்த அயலக தமிழர்கள் தமிழக சொந்தங்களால் வியப்பு
ADDED : ஆக 11, 2025 04:20 AM

மதுரை: தமிழ்நாட்டின் கலாசார உறவுகளை மேம்படுத்தும் 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 100 அயலக தமிழர்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
சுற்றுலா துறை சார்பில் சென்னையில் இருந்து சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி சென்றுவிட்டு மதுரை வந்தனர்.
அவர்களை கலெக்டர் பிரவீன்குமார் வரவேற்றார். அவரது தலைமையில் நடந்த கலந்துரையாடலில் டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி பங்கேற்றனர். இலங்கை, பிஜி,ரீயூனியன், மார்டினிக், குவாடலுாப், இந்தோனேஷியா, தென்ஆப்ரிக்கா, மியான்மர், மொரீஷியஸ், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி நாட்டவர் இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், கீழடி, காந்திமியூசியம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை பெண் மகிழ்ச்சி கலெக்டர் கூறுகையில், ''தமிழ், தமிழர் பெருமைகளை உணரும் வகையில் இப்பயணம் அமைந்துஉள்ளது. மதுரை கலாசார, பண்பாடு, திருவிழாக்களுக்கு பெருமை பெற்ற நகரம். தமிழகத்தில் அரசின் திட்டங்கள், மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகள், பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது' என்றார்.
இலங்கையைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்ஷிகா கூறியதாவது: இலங்கையில் நாங்கள் கிணற்றுக்குள் தவளையைப் போலத்தான் இருந்தோம். இங்கு வந்த பின்புதான் தமிழகத்தில் இப்படி ஒரு சொந்தங்கள் இருக்கின்றனரா என்று வியப்பாக உள்ளது. எங்கள் மூதாதையர் மதுரை, திருநெல்வேலி, சென்னை கொளத்துாரில் உள்ளனர். தமிழக மக்கள் எங்களை சிறப்பாக வரவேற்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறேன். வேர்களைத் தேடி என்ற திட்டத்தை சிறப்பாக நடத்துவதால் அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.