ADDED : ஜன 24, 2026 05:04 AM
மதுரை: மதுரை ஜான்சிராணி பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழா நடந்தது. நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தார். காந்தி மியூசியம் தேவதாஸ் முன்னிலை வகித்தார். துணைமேயர் நாகராஜன், தமிழ்த்தாங்கி சங்கம் நிறுவனர் திரவிய பாண்டியன், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ், எழுத்தாளர் அந்தோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேதாஜி சிலை பாதுகாப்பு, பராமரிப்பு குழு, நேதாஜி தேசிய இயக்கம் செய்திருந்தது.
திருநகரில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை, அகில இந்திய பா.பி., சார்பில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் சசிக்குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் அழகுசுந்தரபாண்டி, பா.பி., மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துராஜா, தொழிற்சங்க நிர்வாகி துரை சபின், அறக்கட்டளை இணைச் செயலாளர் கோபிநாத், கவுன்சிலர் சுவேதா கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் பா.பி., கட்சி சார்பில் நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், நிர்வாகிகள் மணிகண்டன், பாஸ்கரபாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் பா.பி., வழக்கறிஞர்கள், கட்சியினர் இணைந்து கொண்டாடினர்.
மேலுார் அ.வல்லாளபட்டியில் பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன், துணைத்தலைவர் கண்ணன், அணியின் மாநில செயலாளர் செந்தில் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் பங்கேற்றனர்.
