ADDED : மார் 25, 2026 07:05 AM
மதுரை: மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லூரி வளாகத்தில், கே.எல்.என்., சவுராஷ்டிரா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கவுன்சில் புதிய நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 15ல் நடந்தது.
முடிவுகளை தேர்தல் அதிகாரி சந்திரசேகரன் அறிவித்தார். இந்த கவுன்சிலின் 2026 - 29க்கான புதிய நிர்வாகிகளாக செயலாளர் கே.என்.கே.கணேஷ், தலைவராக கே.என்.கே.கார்த்திக், பொருளாளராக கே.எஸ்.டி.சிவபிரசாத், உப தலைவராக பி.ஜே.பன்சிதர், இணை செயலாளராக பூர்ணிமா தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஜி.ஆர்.பி.சாந்தி, அமுதா, கீதாபாரதி, கே.எஸ்.குமரேசன், பி.வி.அமர்சிங், வாஹினி, பி.எஸ்.பாலகிருஷ்ணன், என்.எம்.ஆர்.எஸ்.சந்திரகாந்தன், கே.கே. சூர்யகுமாரி தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் நடந்த நிர்வாகக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தத்தமது பொறுப்புகளை ஏற்றனர்.
