/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு
/
மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 31, 2025 11:17 PM

மதுரை:மதுரை கத்தோலிக்க சபையின் புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து நாளை (ஆக.2) மாலை பொறுப்பேற்கிறார்.
துாத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த இவர், 1960ல் பிறந்தார். மதுரை மாவட்டம் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் படிப்பை முடித்து, பெங்களூருவில் குருத்துவப் பயிற்சியை முடித்தார். 1987 ல் பாளை., மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பாளை., ஆயரின் செயலாளர், குருமட அதிபர், திருஅவைச் சட்ட பேராசிரியர், முதன்மை குரு என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2019 ல் பாளை., மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பரில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஓய்வு பெற்றதையடுத்து, அவரது இடத்தில் பொறுப்பு ஆயராக (திருத்துாது நிர்வாகி) நியமிக்கப்பட்டார். தற்போது பேராயராக அறிவிக்கப்பட்டு, நாளை மாலை மதுரை ஞானஒளிவுபுரம் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொறுப்பேற்க உள்ளார். ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பாளர் ஜெரோம் ஏரோனிமுஸ் செய்து வருகிறார்.