ADDED : அக் 24, 2026 10:47 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ.கொக்குளம் ஊராட்சி செக்கானுாரணியில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
இதில் 7 பஸ் நிறுத்தங்கள், 27 கடைகள், 2 ஓட்டல்கள், நான்கு காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில் இன்று (அக்.,24) புதிய பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நிர்மல் குமார் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கப்பாண்டி, கருப்பையா, விஜய் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
