sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 காங்., புதிய மாவட்ட தலைவர்களுக்கு 'செக்' ஆளுங்கட்சி 'அட்ஜெஸ்ட்'வாதிகளை மாற்ற தடை

/

 காங்., புதிய மாவட்ட தலைவர்களுக்கு 'செக்' ஆளுங்கட்சி 'அட்ஜெஸ்ட்'வாதிகளை மாற்ற தடை

 காங்., புதிய மாவட்ட தலைவர்களுக்கு 'செக்' ஆளுங்கட்சி 'அட்ஜெஸ்ட்'வாதிகளை மாற்ற தடை

 காங்., புதிய மாவட்ட தலைவர்களுக்கு 'செக்' ஆளுங்கட்சி 'அட்ஜெஸ்ட்'வாதிகளை மாற்ற தடை


ADDED : மார் 17, 2026 05:07 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்க மாநில தலைமை தடை விதித்துள்ளது.

மாநிலத்தில் செயல்பாடுகள் அடிப்படையில் காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம் நடந்தது.

மொத்தமுள்ள 77ல் 72 மாவட்டங்களுக்கு ஜனவரியில் புதிய தலைவர்களை அகில இந்திய தலைமை நியமித்தது.

தலைவருக்கு கீழ் உள்ள துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.

இதனால் பல மாவட்டங்களில் தற்போதைய புதிய தலைவருக்கும், நிர்வாகிகளுக்கும் முட்டல் மோதல் நீடிக்கின்றன. இதையடுத்து தங்களுக்கான ஆதரவாளர்களை நிர்வாகிகளாக நியமிக்க மாநில தலைமையில் வாய்மொழி உத்தரவு பெற்று, புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்தனர். இது பழைய நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவர்களின் மாநில, அகில இந்திய தலைமைக்கு கடிதங்கள், சீனியர் தலைவர்கள் வழியாக தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக 'பழைய நிர்வாகிகள் யாரையும் மாற்றி புதியவர்களை நியமிக்க வேண்டாம்' என மாநில தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: தற்போதைய தி.மு.க.,- காங்., கூட்டணி பல முரண்பாடுகளை கடந்து ஏற்பட்டுள்ளது.

இன்னும் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங்., ஒருங்கிணைப்பு குழு மீதும் தி.மு.க.,வுக்கு திருப்தி இல்லை.

மாவட்டங்களில் பல தேர்தல்களில் களம்கண்டு அனுபவசாலிகளாக தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.

அவர்கள் காங்., புதிய மாவட்ட தலைவர்களை கண்டுகொள்வதில்லை. பழைய நிர்வாகிகளுடன்தான் அவர்கள் தொடர்பில் உள்ளனர்.

அவர்களையும் தற்போது மாற்றிவிட்டால் தேர்தல் நேரத்தில் கள ரீதியான சிக்கல்களை காங்., எதிர்கொள்ள நேரிடும். பழைய நிர்வாகிகள் தான் தி.மு.க.,வினரை 'அட்ஜெஸ்ட்' செய்வர். அதுபோன்ற 'அட்ஜெஸ்ட்'வாதிகள் தற்போது தேவை என்ற முடிவில் அவர்களை மாற்ற வேண்டாம் என மாநில காங்., முடிவெடுத்துள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us