ADDED : ஜன 06, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன் ஏழு மார்பிள் கற்களை ஒரே 'கிக்' மூலம் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன் போஸ்னியாவைச் சேர்ந்த பெல்மின் ஒரேகிக் மூலம் ஐந்து மார்பிள் கற்களை உடைத்ததே உலக சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பயிற்சியாளர் நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணனின் 34வது கின்னஸ் உலக சாதனை இதுவாகும்.

