ADDED : ஏப் 04, 2026 06:36 PM
உசிலம்பட்டி: சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்யும் வகையில் 1200 க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அந்தப் பகுதியில் புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
உத்தப்பநாயக்கனுார் அருகே சீமானுாத்து ஊராட்சி நல்லிவீரன்பட்டி ஓட்டுச்சாவடியில் அக்கிராம மக்களும், அருகில் 1 கி.மீ., தொலைவில் உள்ள அண்ணாநகர் காலனி மக்களும் ஓட்டளித்தனர். இதில் மொத்தம் 1,800 க்கு மேல் வாக்காளர்கள் இருந்ததால், 1,200 க்குமேல் உள்ள வாக்காளர்களை பிரித்து, கூடுதல் வாக்காளர்களுக்கு தனியாக அண்ணாநகர் காலனி அங்கன்வாடி மையத்தில் புதிதாக ஓட்டுச்சாவடியை (எண் 35) அமைத்துள்ளனர். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவித்தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. துணைத் தாசில்தார் சரவணகுமார், வி.ஏ.ஓ., பத்மநாபன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
