/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்
/
மாநகராட்சியை கண்டித்து நுாதன போராட்டம்
ADDED : ஜன 15, 2024 11:56 PM
மதுரை: மதுரை மாநகராட்சி செல்லுார் 23, 24 வது வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் பொங்கல் திருவிழா கொண்டாட முடியாத அளவிற்கு கழிவு நீர் தேங்கியிருந்ததால் இந்திரா நகர் லெனின் தெரு, கல்யாணசுந்தரபுரம் 10வது தெரு போஸ் வீதி மெயின் ரோடு பகுதிகளில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் கழிவுநீருக்குள் கற்களால் அடுப்புக்கூட்டி சாக்கடை நீரை பயன்படுத்தி பொங்கல் வைத்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், ''செல்லுார் பகுதி முழுவதும் இதுபோல் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது. எங்கும் சுகாதார கேடாக உள்ளது. கொசுக்கடி, காய்ச்சலால் மக்கள் பாதிக்கின்றனர். இனியாவது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.