தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சத்துணவு பணியாளர் புதிய மாநில நிர்வாகிகள்

 சத்துணவு பணியாளர் புதிய மாநில நிர்வாகிகள்

 சத்துணவு பணியாளர் புதிய மாநில நிர்வாகிகள்


ADDED : ஜன 31, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அரசு சத்துணவுப் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் ஜெயகணேஷ் பங்கேற்றனர்.

புதிய மாநில தலைவராக தனுஷ்கோடி, பொதுச் செயலாளராக விமலா, பொருளாளராக சி.சேட், துணைத் தலைவர்களாக குணசேகரன், அண்ணாத்துரை, சின்னச்சாமி, மீனாட்சி, இணைச் செயலாளர்களாக ரவி, கவுரி, சத்யபாமா, மீனா கலைச்செல்வி, தணிக்கையாளராக திருவள்ளுவன், சட்ட ஆலோசகராக முத்துராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு அனைத்துத்துறை காலியிடங்களில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி பதிவுறு எழுத்தராக்க வேண்டும்.

சத்துணவு மையம், அங்கன்வாடி, காலை உணவுத் திட்டம் ஆகிய மூன்றையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us