/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாதி படுகொலைக்கு முற்றுப்புள்ளி அரசிடம் கேட்கிறது 'புதிய தமிழகம்'
/
ஜாதி படுகொலைக்கு முற்றுப்புள்ளி அரசிடம் கேட்கிறது 'புதிய தமிழகம்'
ஜாதி படுகொலைக்கு முற்றுப்புள்ளி அரசிடம் கேட்கிறது 'புதிய தமிழகம்'
ஜாதி படுகொலைக்கு முற்றுப்புள்ளி அரசிடம் கேட்கிறது 'புதிய தமிழகம்'
ADDED : ஜன 19, 2025 05:08 AM
போத்தனூர்: கோவை, குனியமுத்துாரில் புதிய தமிழகம் கட்சியின், மாநில அரசியல் உயர்மட்ட குழு சிறப்பு கூட்டம், கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.
இதில் கட்சியின் திருத்தி அமைக்கப்பட்ட நூறு பேர் கொண்ட அரசியல் உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டது. கட்சியின், 28ம் ஆண்டு மாநில மாநாட்டை, டிச., மாதம் நடத்துவது, இதில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்வது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென் தமிழ்நாட்டில் தொடரும் ஜாதி படுகொலைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும், உளவுத்துறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இளையரசனேந்தல், சித்தரம்பட்டி, அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளை, தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும், போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும், கவர்னருடன் முதல்வர் மோதல் போக்கை அரசு கைவிட வேண்டும் உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.