நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருது விழா
மதுரை: தேடல் அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்கள், யோகா, நடன கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பரங்குன்றத்தில் நடந்தது. பாரதியார் பேத்தி உமாபாரதி தலைமை வகித்து விருதுகள் வழங்கினார். டாக்டர்கள் ஐஸ்வர்யா, சரவணன், எம்.பி.எப்., சர்வதேச பள்ளி முதல்வர் கற்பகவள்ளி, அறக்கட்டளை நிறுவனர் மகேந்திர காயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிப்பீட்டு முகாம்
மதுரை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் தெற்கு வட்டாரவள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவணனமுருகன் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், பி.இ.ஓ., மோசஸ் பெஞ்சமின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, ஒருங்கிணைப்பாளர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 133 மாணவர் பயனடைந்தனர்.