/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியின் பெரிய கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் பத்தல... பத்தல... : வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தம் அவசியம்
/
மாநகராட்சியின் பெரிய கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் பத்தல... பத்தல... : வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தம் அவசியம்
மாநகராட்சியின் பெரிய கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் பத்தல... பத்தல... : வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தம் அவசியம்
மாநகராட்சியின் பெரிய கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் பத்தல... பத்தல... : வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தம் அவசியம்
ADDED : டிச 17, 2022 05:59 AM

மதுரை-மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில் கூடுதல் வி.ஏ.ஓ.,க்களை நியமித்தால் அரசு திட்டங்கள், சான்று வழங்கும் பணியில் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
வருவாய்த் துறையில் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய அடித்தளத்தில் பணியாற்றுபவர்கள் வி.ஏ.ஓ.,க்கள். பொதுமக்கள் அன்றாடபிரச்னைகளுக்கு வி.ஏ.ஓ.,க்களை பார்த்து பணியை முடிப்பது சவாலான பிரச்னையாக உள்ளது. வருவாய்த் துறையில் நிர்வாக பணியிடங்கள் அதிகரித்த அளவுக்கு, 50 ஆண்டுகளாக இப்பணியிடங்கள் அதிகரிக்காததால் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
புதிய தாலுகாக்கள்
மாநகராட்சி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை வடக்கு, தெற்கு என 2 தாலுகாக்கள் இருந்தன. மக்கள் தொகை அதிகரிப்பால் 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா என்ற விதிப்படி, தற்போது கூடுதலாக மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் என 3 தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் கிராமங்களை பிரித்து கூடுதல் வி.ஏ.ஓ., பணியிடங்கள்உருவாக்கவில்லை.
மாநகராட்சி பகுதியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பல கிராமங்களில் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேர் என உள்ளனர். அதேசமயம் வடக்கு மதுரை, மேல்மதுரை, கீழ்மதுரை, மாடக்குளம், அனுப்பானடி, வில்லாபுரம், வண்டியூர், சாத்தமங்கலம்,தல்லாகுளம், பீபிகுளம் உட்பட சில கிராமங்களில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை மக்கள் உள்ளனர். இக்கிராமங்களிலும் ஒரு வி.ஏ.ஓ.,தான் உள்ளார். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
கூடுதல் வி.ஏ.ஓ., அவசியம்
வி.ஏ.ஓ., நலமுன்னேற்றசங்க முன்னாள் மாநில செயலாளர் சந்திரமோகன் கூறியதாவது:
தாலுகாக்களை போல, பெரிய கிராமங்களையும் பிரித்து புதிதாக வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதற்கு நிதி அதிகம் தேவை எனக்கருதினால், தேவையான கிராமங்களில் கூடுதல் வி.ஏ.ஓ., பணியிடம் உருவாக்கலாம்.
ஒரு தாலுகாவில் பொது, சமூகநலத்திட்டம், தேர்தல், பொது வினியோகத்திற்கென கூடுதலாக தாசில்தார்கள் இருப்பதுபோல, கிராம நில நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, சமூகபாதுாப்பு என வி.ஏ.ஓ.,க்களை நியமிக்கலாம். இதனால் மக்கள் தொகை கூடுதலான கிராமங்களில் பணியில் பாதிப்பு ஏற்படாது, என்றார்.