தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரவு கடைகள்: கோரிக்கை மனு

இரவு கடைகள்: கோரிக்கை மனு

இரவு கடைகள்: கோரிக்கை மனு


ADDED : நவ 23, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்,; திருப்பரங்குன்றத்தில்ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளதாவது:

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன்,முருக பக்தர்கள் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் வருவர். இங்கு நுாற்றுக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருப்பதால் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் முடித்து புறப்படுவர்.

இரவு 10:50 மணிக்கு உணவகங்கள், டீக்கடைகளை அடைக்க போலீசார்கூறுகின்றனர். வெளியூர்களிலிருந்து இரவில் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியாமல் அவதி அடைகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு இரவு 12:00 மணி வரை உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம், போலீசாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us