/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
1630 மையங்களில் என்.ஐ.எல்.பி., தேர்வு 27, 256 பேர் பங்கேற்பு
/
1630 மையங்களில் என்.ஐ.எல்.பி., தேர்வு 27, 256 பேர் பங்கேற்பு
1630 மையங்களில் என்.ஐ.எல்.பி., தேர்வு 27, 256 பேர் பங்கேற்பு
1630 மையங்களில் என்.ஐ.எல்.பி., தேர்வு 27, 256 பேர் பங்கேற்பு
ADDED : நவ 11, 2024 04:29 AM
மதுரை: மதுரையில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் மூலம் 1630 மையங்களில் 27 ஆயிரத்து 256 பேர் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு (என்.ஐ.எல்.பி.,) எழுதினர்.
பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத அனைவருக்கும் எழுத்தறிவு, எண்ணறிவு அளிக்கும் இத்திட்டத்தில் மாவட்ட அளவில் 27 ஆயிரத்து 735 பேர் எழுதப்படிக்க தெரியாதவர் என கண்டறிந்து அவர்களுக்கு ஜூலை 15 முதல் தன்னார்வலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்களுக்கான தேர்வு நேற்று காலை 10:00 - மாலை 5:00 மணி வரை நடத்தப்பட்டது. வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதம் என 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்பட்டன.
80 வயதை தாண்டிய நிலையிலும் பலர் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். மையங்களுக்கு வரஇயலாத நிலையில் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்தனர்.
சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் டி.இ.ஓ.,க்கள் அசோக்குமார், சிவக்குமார், இந்திரா, பி.இ.ஓ.,க்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.