/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை போலீஸ் கமிஷனர் அதிகாரம் விரிவடைகிறது : புறநகர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைவதால் எல்லையில்லா தொல்லை இனியில்லை:..
/
மதுரை போலீஸ் கமிஷனர் அதிகாரம் விரிவடைகிறது : புறநகர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைவதால் எல்லையில்லா தொல்லை இனியில்லை:..
மதுரை போலீஸ் கமிஷனர் அதிகாரம் விரிவடைகிறது : புறநகர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைவதால் எல்லையில்லா தொல்லை இனியில்லை:..
மதுரை போலீஸ் கமிஷனர் அதிகாரம் விரிவடைகிறது : புறநகர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைவதால் எல்லையில்லா தொல்லை இனியில்லை:..
UPDATED : ஜன 03, 2025 02:16 AM
ADDED : ஜன 03, 2025 02:00 AM

மதுரை: மதுரை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகள் இணைக்கப்படுவதால், போலீஸ் கமிஷனர் அதிகாரத்தின்கீழ் நகர் எல்லையில் உள்ள புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சி வார்டுகள் 72 ஆக இருந்தபோது, அதையொட்டிய பகுதிகள் நகர் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் இருந்தன. 2011ல் நகர் எல்லையில் உள்ள புறநகர் பகுதிகளை சேர்த்து வார்டு எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது. இதையொட்டி எஸ்.பி., கட்டுப்பாட்டில் இருந்த அவனியாபுரம், திருப்பாலை, கூடல்புதுார், திருப்பரங்குன்றம், திருநகர் போலீஸ் ஸ்டேஷன்கள் கமிஷனர் அதிகாரத்திற்குகீழ் கொண்டு வரப்பட்டன.
தற்போது நகரின் வளர்ச்சிக்கேற்ப புறநகர் பகுதிகளான கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, அரும்பனுார், கொடிக்குளம், செட்டிக்குளம், கோவில் பாப்பாகுடி, ஆலாத்துார், பேச்சிக்குளம், விரகனுார், நாகமலைபுதுக்கோட்டை, கரடிபட்டி, ஏற்குடி, அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து புறநகரில் உள்ள சில ஸ்டேஷன்களும், சில பகுதிகளும் கமிஷனருக்குகீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளனர்.
குறிப்பாக நாகமலைபுதுக்கோட்டை, கருப்பா யூரணி, ஒத்தக்கடை, பெருங்குடி போலீஸ் ஸ்டேஷன்கள் கமிஷனருக்குகீழ் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகள் அருகில் உள்ள ஸ்டேஷன்களுடன் இணைக்கப்பட உள்ளன. உதாரணமாக கருப்பாயூரணி ஸ்டேஷனிற்குட்பட்ட வரிச்சியூர், அம்மாபட்டி, நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனிற்குட்பட்ட கீழகுயில்குடி, வடபழஞ்சி பகுதிகள் புறநகருடன் இணைய வாய்ப்புள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுக்கு கருத்துரு அனுப்பிய பின், நகராட்சி நிர்வாகத்துறை, உள்துறையின் ஒப்புதல் பெற்று, நிர்வாக செலவினம், மக்கள்தொகை பெருக்கம், விரிவாக்கப்பகுதிகளின் வளர்ச்சியை பொறுத்து அரசு கொள்கை முடிவு எடுக்கும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடரில் முறைப்படி அறிவிக்கப்படும். இந்த நடைமுறையை செயல்படுத்த குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.
நாகமலைபுதுக்கோட்டை, கருப்பாயூரணி, ஒத்தக்கடை, பெருங்குடி போலீஸ் ஸ்டேஷன்கள் கமிஷனருக்குகீழ் இணைக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதில் சில பகுதிகள் அருகில் உள்ள ஸ்டேஷன்களுடன் இணைக்கப்பட உள்ளன.