/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கே.கே.நகர் முதல் ஒத்தக்கடை வரை மேம்பாலம் அமைக்க வாய்ப்பில்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

ADDED : அக் 16, 2024 04:01 AM
மதுரை : மதுரை கே.கே.நகர் முதல் ஒத்தக்கடை விவசாயக் கல்லுாரி வரை மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை வழக்கறிஞர் அருண் ராம்நாத் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை கே.கே.நகர் எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா முதல் ஒத்தக்கடைவரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயண நேரம் அதிகரிக்கிறது. விபத்துகள் ஏற்படுகின்றன.
கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை விவசாயக் கல்லுாரி வரை மேம்பாலம் அமைக்கக்கோரி மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
நெடுஞ்சாலைத்துறை தரப்பு: இப்பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதிக சந்திப்புகள் உள்ளன. மேம்பாலம் அமைத்தாலும் அதன் கீழ் பகுதியைத்தான் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி, தத்தமது பகுதிகளுக்கு சென்று வருவர். மேம்பாலம் அமைத்தாலும் அதன் பயன்பாடு குறைவாகத்தான் இருக்கும். மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை.மேலமடை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
கே.கே.நகர் தோரண வாயில் வழியாக ஆவின் சந்திப்பு சென்று, அங்கிருந்து மேலமடை மேம்பாலத்தை பயன்படுத்தி விவசாயக் கல்லுாரி சந்திப்பை சென்றடையலாம்.
இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தது.
இதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அக்.21க்கு ஒத்திவைத்தனர்.