/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விலையும் இல்லை; விளைச்சலும் இல்லை பருத்தி விவசாயிக்கு நிம்மதியில்லை
/
விலையும் இல்லை; விளைச்சலும் இல்லை பருத்தி விவசாயிக்கு நிம்மதியில்லை
விலையும் இல்லை; விளைச்சலும் இல்லை பருத்தி விவசாயிக்கு நிம்மதியில்லை
விலையும் இல்லை; விளைச்சலும் இல்லை பருத்தி விவசாயிக்கு நிம்மதியில்லை
ADDED : டிச 30, 2025 07:13 AM

பேரையூர்: பேரையூர் பகுதியில் பருத்தி விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படு கிறது. பணப்பயிர்களில் இடம் பிடித்துள்ள பருத்தி இந்திய பொருளாதாரம், தொழில்துறையில் ஆதிக்க மும், ஏற்றுமதி துறையில் முக்கிய வர்த்தகம் கொடுக்கும் ஜவுளி துறையின் மூலப் பொருளாகவும் உள்ளது.
பேரையூர் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இந்தாண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து, பின்னர் பருத்தி செடிகளின் வளர்ச்சியின் போது மழை இல்லாததால் வளர்ச்சியும், பூப்பிடிப்பதும் பாதித்தது. இதனால் பருத்தி விளைச்சலும் பாதி அளவு குறைந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ. 100 க்கு விற்ற பருத்தி, தற்போது கிலோ ரூ. 50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறிய தாவது:
விதை, உரம், மருந்து, களையெடுப்பு என பெருந்தொகை செலவு செய்துள்ளோம். கடன் வாங்கி பயிர் செய்தோம். மகசூல் மிகவும் குறைந்து விட்டது. தற்போது விலையும் குறைந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இப்படி ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்படுவதால் விவசாய பரப்பை அடுத்தாண்டு குறைக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

