ADDED : பிப் 19, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே சின்ன ஊர்சேரியில் த.வெ.க., சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு வட மாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
மாவட்ட செயலாளர் கல்லானை, இணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் ஹாரிஸ் துவக்கி வைத்தனர். ஒரு காளைக்கு 15 நிமிடமும், அதனை அடக்க 9 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். முன்னதாக காளைக்கு மாலை, வேட்டி, கட்டில் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் அண்டா, கட்டில், ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
