தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வடமாடு மஞ்சுவிரட்டு

 வடமாடு மஞ்சுவிரட்டு

 வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : ஜூலை 20, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ., வல்லரசு நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜய்மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

வடத்தில் கட்டப்பட்ட காளையை 20 நிமிடங்களுக்குள் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்கினால் வீரர்களுக்கு வெற்றி. இல்லையெனில் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பதினைந்துக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. அவற்றை அடக்கியவர்களுக்கு பரிசாக ரூ.15 ஆயிரம், பித்தளை குத்துவிளக்கு, சைக்கிள், 'ட்ரெஸ்ஸிங் டேபிள்கள்' உள்ளிட்டவை வழங்கினர். கல்புளிச்சான்பட்டி கிராமத்தினர், இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us