
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே உடன்காட்டுப்பட்டியில் கொடிக்குளம் ஐந்து ஊர் சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 16 மாடுகள் கலந்து கொண்டன. பரிசுத் தொகையாக ரூ.பத்தாயிரம் வழங்கப்பட்டது.தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் சுதாகரன், அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் வனிதா வரவேற்றார்.