/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
/
மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 10, 2026 02:44 AM
மதுரை: சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
மதுரை நர்மதா தாக்கல் செய்த பொதுநல மனு:
அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருதி, முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி, தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. தலைமைச் செயலர், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை முதன்மை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து, ஏப்., 2ல் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.