ADDED : டிச 26, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா முதல்வர் பாத்திமா மேரி தலைமையில் நடந்தது.
மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி துவக்கி வைத்தார். அழகாபுரியில் கிழவிகுளம் முன்னாள் ஊராட்சி தலைவர் பரந்தாமன், மரியம்மாள், சமூக சேவகி ஹெலன் கீதா, கல்விழிப்பட்டி வி.ஏ.ஓ., அருண், சின்ன இலந்தைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், மேல சின்னணம்பட்டி ஊராட்சி தலைவர் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோஷா வரவேற்றார். மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

