ADDED : ஜன 28, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.,3 முதல் ஆக்டோ ஜியோ (ஆசிரியர் அரசு ஊழியர்கள் நடவடிக்கை குழு) சார்பில் தொடர் போராட்டம் நடக்கிறது. இதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஒத்தக்கடை, உத்தங்குடி பள்ளிகளில் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆக்டோ ஜியோ மாநில இணை அமைப்பாளர் ஆரோக்கியதாஸ் பேசினார். ஜன.,31ல் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு நடத்துவது, இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

