/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இதையும் பரிசீலிங்க ஆபீசர்ஸ் ; பசுமலை, வில்லாபுரம் நுழைவு வாயில்களையும் அகற்ற ; இங்கேயும் ஏற்படுகிறது போக்குவரத்து நெருக்கடி

ADDED : செப் 25, 2024 03:48 AM

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயில்களை அகற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், அதேபோல் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படும் பசுமலை, வில்லாபுரம் நுழைவு வாயில்களையும் மாநகராட்சி தானாக முன்வந்து அகற்ற வேண்டும்.
மதுரையில் நடந்த உலகத்தமிழ்ச்சங்க மாநாட்டையொட்டி மதுரை மாவட்ட எல்லைகளில் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. மாநகராட்சி 72ல் இருந்து 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்ட பின் நகரின் எல்லைகள் விரிவடைந்தன. இதனால் வடக்கில் உத்தங்குடி, தெற்கில் திருநகர், மேற்கில் அவனியாபுரம், கிழக்கில் விளாங்குடி வரை மாநகராட்சி வார்டுகள் வரையறுக்கப்பட்டன. தற்போது நுழைவு வாயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயில்களை 6 மாதங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. இதை மக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.
இது போன்றே ரோடு விரிவாக்கம் காரணமாக பசுமலை, வில்லாபுரம் நுழைவு வாயில் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஒரே நடவடிக்கையாக மாநகராட்சி தானாக முன்வந்து இந்த இரண்டு நுழைவு வாயில்களையும் அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நுழைவுவாயில்களை தாண்டி ரோடு அகலமாகி விட்டது. இதனால் ரோட்டின் நடுவே நுழைவுவாயில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. நீதிமன்றம் உத்தரவுபடி மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவுவாயில்களை அகற்றும்போது பசுமலை, வில்லாபுரம் நுழைவுவாயில்களையும் அகற்றினால் மாநகராட்சியை நிச்சயம் நீதிமன்றம் பாராட்டும்'' என்றனர்.