/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்
/
ரோடு பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள்
ADDED : ஆக 03, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் :  சோழவந்தான் அருகே காடுபட்டி பாலம் முதல் தாமோதரன்பட்டி பாலம் வரை  தார் ரோடு பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயி கதிர்வேல் கூறியதாவது: காடுபட்டி பாலம் முதல் தாமோதரன் பட்டி பாலம் வரை 3 கி.மீ., தொலைவுக்கு மண்ரோடாக இருந்தது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓராண்டுக்கு முன் தார் ரோடு அமைக்க பணிகள் தொடங்கினர். ஜல்லிக்கற்கள், செம்மண் கொட்டி ரோடு அமைத்தனர். அதன்பின் கண்டு கொள்ளாததால், தார் ரோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மாவட்ட நிர்வாகம் விரைவில் தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

