ADDED : நவ 12, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ரூ.6கோடியில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிக்கல்லை துணை முதல்வர்உதயநிதி காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
தற்போது ரூ.8 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை தடகள டிராக் மற்றும் அதன் உட்பகுதியில் செயற்கை புல்தரை கால்பந்து அரங்கு அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் 2025 டிசம்பரில்மதுரையில் உலகக் கோப்பைக்கான ஜூனியர் பிரிவு ஹாக்கி போட்டிகள்நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.6 கோடி மதிப்பில் ஒலிம்பிக்அகாடமி மதுரையில் உருவாக்கப்பட உள்ளது. இங்குள்ள ஹாக்கி, கால்பந்து உட்பட செயற்கை புல்தரை அரங்குகள் சீரமைக்கப்பட்டு சர்வதேச போட்டிக்கு தயார்படுத்தப்படும். விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விடுதியும் கட்டப்பட உள்ளது.