/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜன.22ல் ராம நாமம் வி.எச்.பி., வலியுறுத்தல்
/
ஜன.22ல் ராம நாமம் வி.எச்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியதாவது:
ஹிந்துக்களின் 500 ஆண்டு கனவான ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு மிகப் பிரம்மாண்டமான கோயில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் ஜன.,22ல் நடக்கிறது. நேரில் பங்கேற்க இயலாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே ராமபிரானின் அருள் பெற வி.எச்.பி., கேட்டுக்கொள்கிறது.
அன்று வீடுதோறும் விளக்குகள் ஏற்றவும். 108 ராம நாமம் கூறவும். எல்லா கோயில்களிலும் அன்று சிறப்பு பூஜை நடத்த கோயில் பூஜாரிகள் பேரவை முடிவுசெய்துள்ளது.
இதில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.